மலரென்று
நினைத்து
மதி
நிலவின் ஆடையை மெல்ல வந்து
வண்ணத்து
பூச்சொன்று
வந்து
வந்து தீண்டி செல்கிறதே!!
தீண்டும்
வண்ணத்து பூச்சியிடம்
தேவதை
அவள் என்ன கேட்கிறாள்!!
என்னை
தானே கேட்கிறாள்!
என்னவன்
தன் மனம் விரும்பும் மன்னவன்
எங்கே
என்று தேடி பிடித்து தெரிந்து
கொண்டு
வா உண்மை அறிந்து கொண்டு வா
என்றல்லவா
கேட்கிறாள் !!வாஞ்சையுடன்
கொஞ்சும்
தமிழ் மொழியில்
அந்த
வஞ்சி கொடியிடையாள்
மலர்
செடியின் அருகில் நின்றவாறே!!!
0 Comments